‘ப்ரோ க்ளப்’ ஆனது ‘ப்ரோ கோட்’ – ரவி மோகன் தகவல்

0
23

ரவி மோகன் நடித்து வரும் ’ப்ரோ கோட்’ படத்தின் தலைப்பு ‘ப்ரோ க்ளப்’ என மாற்றப்பட்டுள்ளது. நடிகரும், தயாரிப்பாளருமான ரவி மோகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் தனது தயாரிப்பில் அடுத்தடுத்து வர இருக்கும் படங்கள் பற்றி கூறும்போது, “ஜீனி படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. ‘கராத்தே பாபு’ படத்தில் ஒரு பாடல் மட்டும் எடுக்க வேண்டும். 2 மாதத்தில் படம் வெளியாகும்.

எனக்கு பிரச்சினைகளே பிடிக்கவில்லை. அதனால் ‘ப்ரோ கோட்’ படத்தின் பெயர் ‘ப்ரோ க்ளப்’ என மாற்றப்பட்டு விட்டது’ என்று கூறியுள்ளார்.

கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன், எஸ்.ஜே.சூர்யா, அர்ஜுன் அசோகன் உள்ளிட்ட பலர் நடிக்க ‘ப்ரோ கோட்’ என்ற தலைப்புடன் படம் தொடங்கப்பட்டது. ரவி மோகன் தயாரிப்பாளராகவும் மாறி இதனை தயாரித்து வந்தார்.

இப்படம் அறிவிக்கப்பட்ட உடனே ‘ப்ரோ கோட்’ தலைப்பை உபயோகிக்க கூடாது என்று டெல்லியைச் சேர்ந்த மதுபான உற்பத்தி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. 

கடந்த பிப்ரவரி மாதத்தில் இரண்டு தரப்புக்கும் இடையே விரைவில் சமரச ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியவில்லை. இந்த நிலையில், படத்தின் பெயர் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here