ஈரான் உச்ச தலைவர் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு

0
25

போரில் மறைந்த ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து டெஹ்ரான் மீது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வான்வழித் தாக்குதலை தொடங்கின. இந்த தாக்குதலின் முதல் நாளில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டார். இஸ்லாமிய சட்டத்தின்படி இறந்தவர்களின் உடலை கூடிய விரைவில் அடக்கம் செய்ய வேண்டும் என்றாலும் போர் காலங்களில் இதற்கு விதிவிலக்குகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் கமேனியின் இறுதிச்சடங்குகள் தலைநகர் டெஹ்ரானில் ஜூலை 4-ம் தேதி தொடங்க உள்ளன. அவரது சொந்த ஊரான, வடகிழக்கு புனித நகரமான மஷாத்தில் ஜூலை 9-ம் தேதி உடல் நல்லடக்கம் செய்யப்படுவதுடன் இறுச்சடங்கு நிறைவடைகிறது.

இறுதிச் சடங்கு ஏற்பாடுகளில், ஜூலை 7-ம் தேதி டெஹ் ரானுக்கு தெற்கே உள்ள மற்றொரு புனித நகரமான கோமில் நடைபெறும் சடங்குகளும் அடங்கும். இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் சுமார் 2 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அழைப்பு விடுத்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here