நாட்டில் விரைவில் பிளாஸ்டிக் கரன்சி: நீடித்த உழைப்பு, உற்பத்தி செலவு குறைவு

0
23

நீடித்த உழைப்​பு, உற்​பத்தி செலவு குறைவு ஆகியவை காரண​மாக நாட்​டில் பிளாஸ்​டிக் கரன்​சிகளை புழக்​கத்​தில் விட ரிசர்வ் வங்கி திட்​டமிட்​டுள்​ளது.

நாட்​டில் டிஜிட்​டல் பண பரிவர்த்​தனை​கள் அதி​கரித்​தா​லும், கரன்சி நோட்​டு​களின் தேவை​யும் அதி​கள​வில்​தான் உள்​ளன. கடந்த 2024-ம் நிதி​யாண்​டில் கரன்சி நோட்​டு​கள் அச்​சிட ரூ.5,101.4 கோடி செல​வானது. இது 2025-ம் நிதி​யாண்​டில் ரூ.6,372.8 கோடி​யாக அதி​கரித்​தது. அதிக கரன்சி நோட்​டு​கள் அச்​சிட ஆர்​டர் கொடுக்​கப்​பட்​ட​தால் இதற்​கான செல​வும் அதி​கரித்​தது.

மேலும் கரன்சி நோட்​டு​கள் காகிதத்​தில் அச்​சிடப்​படு​வ​தால், அவை விரை​வில் சேதம் அடைகின்​றன. கடந்​தாண்​டில் 23.8 பில்​லியன் சேதம் அடைந்த கரன்சி நோட்​டு​களை ரிசர்வ் வங்கி அழித்​தது. இது அதற்கு முந்​தைய ஆண்​டை​விட 12.3 சதவீதம் அதி​கம். இவற்​றில் பெரும்​பாலானவை ரூ.100 மற்​றும் ரூ.500 நோட்​டு​கள்.

நீடித்த உழைப்​பு, உற்​பத்தி செலவு குறைவு ஆகிய​வற்றை கருத்​தில் கொண்டு ரூ.100, ரூ.200 மற்​றும் ரூ.500 நோட்​டு​களை பிளாஸ்​டிக் (பாலிமர்) நோட்​டுக்​களாக அச்​சிட ரிசர்வ் வங்கி திட்​ட​மிட்​டுள்​ளது. பிளாஸ்​டிக் கரன்​சிகளை வெளி​யிட கடந்த 2012-ம் ஆண்டே மத்​திய அரசு முடிவு செய்​தது. முதல்​கட்​ட​மாக 1 பில்​லியன் 10 ரூபாய் நோட்​டு​களை பரிசோதனை அடிப்​படை​யில் புழக்​கத்​தில் விட முடிவு செய்​யப்​பட்​டது.

ஆனால், பிளாஸ்​டிக் கரன்​சிகளை வெளி​யிடு​வ​தில் அப்​போது சில தொழில்​நுட்ப சவால்​கள் இருந்​த​தால், இத்​திட்​டம் நிராகரிக்​கப்​பட்​டது. தற்​போது நவீன தொழில்​நுட்​பங்​களின் வரவால் பிளாஸ்​டிக் கரன்​சிகளை வெளி​யிட ரிசர்வ் வங்கி முடிவு செய்​துள்​ளது. இவற்றை ஏடிஎம் இயந்​திரங்​களாலும் விநி​யோகிக்க முடி​யும் என்​ப​தால், பிளாஸ்​டிக் கரன்சி திட்​டம் விரை​வில் அறி​முகம்​ செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here