‘ஹிஜாப் அணியாமல் இசைக் கச்சேரி’ – ஈரானிய பாடகிக்கு 74 கசையடி

0
19

ஈரானிய பாடகிக்கும், அவரது இசைக் குழுவைச் சேர்ந்த 4 பேருக்கும், தலா 74 கசையடிகள் வழங்கப்பட்டதாக ஈரானின் அரசு இணையதள செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது. இந்தச் செய்தி உலகளவில் பல்வேறு கண்டனங்களை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், ஆபாசமான, ஒழுங்கீனத்தைத் தூண்டும் கருத்துகளைக் கொண்ட வீடியோவை உருவாக்கி இணையத்தில் வெளியிட்ட காரணத்துக்காகவே ஈரானிய பாடகி பாரஸ்டூ அஹ்மதிக்கும் அவரது இசைக் குழுவினருக்கும் கசையடி தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று ஈரான் அரசு இணையதளத்தின் வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.

யார் இந்த அஹ்மதி?

பாரஸ்டூ அஹ்மதி 1997-ல் வடக்கு ஈரானின் நவ்சஹார் பகுதியில் பிறந்தவர். டெஹ்ரானின் சூர் பல்கலைக்கழகத்தில் திரைப்பட இயக்கம் பாடப் பிரிவில் பட்டம் பெற்றவர். 29 வயதான பாரஸ்டூ பியானோ இசைக் கலைஞரும் கூட. மக்கள் குரலாக ஒலிக்கும் பாடல்களைப் பாட விருப்பமுடையவர்.

இந்நிலையில், டெஹ்ரானுக்கு தெற்கே உள்ள கோம் நகரில், ஆண் இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து ஹிஜாப் இல்லாமல் அஹ்மதி பாடுவது போன்ற காணொளி ஒன்று 2024 டிசம்பரில் யூடியூப்பில் வெளியானது. அந்த வீடியோ அரசுத் தரப்பு கோபத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து அஹ்மதி மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில்தான் இப்போது அஹ்மதிக்கும், மேலும் 4 பேருக்கும் தனித்தனியாக தலா 74 கசையடிகள் வழங்கப்படுள்ளன. கூடவே, அவர்கள் அவர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எவ்வித இசை, கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக் கூடாது. பயணம் செய்யக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்கத்திய அரசுகளும், மனித உரிமைகள் குழுக்களும், ஈரானிய பாடகிக்கு கசையடி வழங்கியதைக் கடுமையாக விமர்சித்துள்ளன. இது சர்வதேச சட்டத்துக்கு எதிரானது எனக் கண்டித்துள்ளன. ஆனால், ஈரான் அவற்றை மறுத்துள்ளது. மேற்குலகு தனது மனித உரிமை அத்துமீறல்களை சரி செய்யட்டும் என்றும் பதிலடி கொடுத்துள்ளது.

2022-ல் முறையாக ஹிஜாப் அணியாத மாஷா அமினி என்ற பெண் கைது செய்யப்பட்டதும், பின்னர் அவர் போலீஸ் காவலில் உயிரிழந்ததும் பெரும் போராட்டத்துக்கு வழிவகுத்தது நினைவுகூரத்தக்கது.

இந்நிலையில், ஈரானிய பாடகிக்கும் அவரது இசைக்குழுவைச் சேர்ந்த 4 பேருக்கும், தலா 74 கசையடிகள் வழங்கப்பட்ட சம்பவம் ஈரானில் பெரும் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here