கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

0
25

 ஃபின்லாந்தின் வாண்டா நகரில் ஆர்க்டிக் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் ரிகோவுடன் மோதினார். இதில் சிந்து 21-15, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

கால் இறுதி சுற்றில் சிந்து, முன்னாள் உலக சாம்பியனான தாய்லாந்தின் ரச்சனோக் இன்டனானுடன் மோதுகிறார். ரச்சனோக் இன்டனான் தனது 2-வது சுற்றில் 21-18, 21-7 என்ற செட் கணக்கில் இந்தியாவின் தன்வி சர்மாவை வீழ்த்தினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தருண் மன்னேப்பள்ளி 14-21, 19-21 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கிறிஸ்டோ போபோவிடம் தோல்வி அடைந்தார். மற்றொரு இந்திய வீரரான கிடாம்பி காந்த் 21-15, 15-21, 13-21 என்ற செட் கணக்கில் கனடாவின் பிரையன் யங்கிடம் வீழ்ந்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here