மருத்துவமனை மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து நர்ஸ் பலி

0
83

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தனியார் மருத்துவமனை மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து நர்ஸ் பலியானார்.

மார்த்தாண்டம் அருகே ஆற்றுார் கல்லுபாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷிகா 22. அங்கு ஒரு கண் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.

சமீபத்தில் இவருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் மருத்துவமனையில் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து அவர் இறந்தார்.

அலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போது தவறி விழுந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணத்தால் குதித்தாரா என்பது பற்றி உடனடியாக தெரியவில்லை.

திருமணநிச்சயதார்த்தத்திற்கு பின்னர் ஆஷிகா மனமுடைந்த நிலையில் காணப்பட்டதாக உடன் வேலை பார்க்கும் ஊழியர்கள் தெரிவித்த னர்.

அவரது அலைபேசியை மார்த்தாண்டம் போலீசார் ஆய்வு செய்து வரு கின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here