ஓடிடியில் ஆக.7-ல் ‘நூறுசாமி’ வெளியீடு

0
21

ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி ‘நூறுசாமி’ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

விஜய் ஆண்டனி நடித்து தயாரித்து வெளியான படம் ‘நூறுசாமி’. இப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. ஜூன் 19-ம் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும், திரையுலகினர் பலரும் இப்படத்தினை பார்த்து பாராட்டு தெரிவித்தார்கள்.

இப்படம் ஆகஸ்ட் 7-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனை விளம்பரப்படுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. சசி இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஸ்வாசிகா, அஜய் திஷன், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

’நூறுசாமி’ படத்தினைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக ’அப்பா குட்டி’ வெளியாகவுள்ளது. இதனை மு.மாறன் இயக்கியுள்ளார். இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here