நித்திரவிளை: நாகராஜா கோயிலில் மஞ்சள் பொங்கல்

0
891

நித்திரவிளை அருகே எஸ் டி மங்காடு பகுதியில் நாகராஜா கோவில் உள்ளது. இந்த கோவிலில் 81வது ஆண்டு ஆயில்ய திருவிழா கடந்த 26 ஆம் தேதி துவங்கியது. விழா நாட்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள்,   சமய மாநாடு, புனர்பிரதிஷ்டை, கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான மஞ்சள் பொங்கல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நேற்று காலை காலை 9 மணி அளவில் பண்டார அடுப்பில் தேவஸ்தான தந்திரி வினு கிருஷ்ணன் தீ மூட்ட பெண்கள் மஞ்சள் பொங்கல் வழிபாடு நடத்தி நாகராஜாவை வணங்கினர். விழாவில் நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் பொங்கல் இட்டு வழிபாடு நடத்தி சென்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here