நித்திரவிளையருகே பாலாமடம் பகுதியில் தூத்தூர் எஸ்பிஐ வங்கி செயல்படுகிறது. மீனவ கிராமங்களின் மையப்பகுதியில் இந்த வங்கி இருப்பதால் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த நிலையில் நேற்று மதியம் வங்கி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தபோது மேலாளர் அறையின் மேல்பகுதியில் இருந்து திடீரென புகையுடன் பற்றி எரிந்தது. இதைப் பார்த்த வாடிக்கையாளர்கள் அலறியடித்து வங்கியில் இருந்து வெளியே ஓடினார்கள். இதுகுறித்து வங்கி ஊழியர்கள் கொல்லங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துவிட்டு வங்கியில் இருந்த தீயணைப்பு சிலிண்டர் மூலம் தீயை அணைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கொல்லங்கோடு தீயணைப்பு வீரர்கள் பரிசோதித்தபோது, மேலாளர் அறையில் உள்ள ஏசிக்கு வருகின்ற மின்சாதனத்தில் இருந்து வெளியான தீப்பொறி தான் புகை வருவதற்கு காரணம் என்றும், பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்தனர். வங்கியில் தீப்பிடித்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Latest article
பிஎட். கட்டணம் செலுத்த அக்.27 வரை அவகாசம்
பிஎட். படிப்பில் சேர்ந்த மாணவர்கள் தகுதி கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த அக்.27 வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) கே.ராஜசேகரன் அனுப்பிய சுற்றறிக்கை: 2025-26-ம் கல்வி ஆண்டில்...
காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 12 மாவட்டங்களுக்கு பருவமழை கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு பருவமழை கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை குறித்தும், முன்னேற்பாடுகள் குறித்தும் மாவட்ட...
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் மிக கனமழை: தங்கச்சிமடத்தில் 170 மில்லி மீட்டர் மழை பதிவு
வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் நேற்றுமிக கன மழை பெய்தது. அதிகபட்சமாக தங்கச்சி மடத்தில் 170 மி.மீ மழை பதிவானது. ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன்,...