Home கன்னியாகுமரி செய்திகள் நித்திரவிளை: பைக் – அரசு பஸ் மோதல்; வாலிபர் படுகாயம்

நித்திரவிளை: பைக் – அரசு பஸ் மோதல்; வாலிபர் படுகாயம்

0

பாத்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் (50). அரசு பேருந்து ஓட்டுனர். இவர் நேற்று முன்தினம் (ஜூலை 14) இரவு 9:30 மணிக்கு தடம் எண் 81சி என்ற பஸ்சை நித்திரவிளை நோக்கி ஓட்டினார். காஞ்சாம்புறம் பகுதியில் வைத்து எதிரே வந்த பைக் அரசு பேருந்து மீது மோதியுள்ளது. இதில் பைக்கில் பயணம் செய்த கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (39) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நித்திரவிளை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version