நேபாள வெள்ளம்: 91 வயது மூதாட்டி உயிர் பிழைத்​தது எப்படி?

0
13

நுவாகோட்​டில் உள்ள தேவி​காட் என்ற ஆற்​றங்​கரை நகரத்​தில் இருந்த முதி​யோர் பராமரிப்பு இல்​லத்தை பெரு​வெள்​ளம் தாக்கியது. வெள்​ளம் வரு​வதை அறிந்து ஒரு சிலர் உயரமான பகுதிக்கு சென்று உயிர் தப்​பினர். அதே நேரத்​தில் 7 முதி​ய​வர்​கள் வெள்ளத்​தில் சிக்கி பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.

இதனிடையே, முதி​யோர் பாரமரிப்பு இல்​லத்​தில் மீட்பு பணி​யில் ஈடு​பட்ட உள்​ளூர் தன்​னார்​வலர்​கள் அங்கு இடி​பாடு​களுக்​குள் சிக்கி​யிருந்த 91 வயதான குணா மாயா போஹரா என்ற மூதாட்டியை போராடி மீட்​டனர். மீட்​கப்​பட்ட குணா மாயா போஹரா சேறு படிந்த நிலை​யில் ஜேசிபி இயந்​திரத்​தில் அமர்ந்திருந்த புகைப்​படம் இணை​யத்​தில் வைரலானதுடன், பெரும் துயரிலும் போராடி உயிர் பிழைப்​ப​தற்​கான நம்பிக்கையின் முக​மாக அவர் மாறி​னார்.

அவர் உள்பட முதி​யோர் பராமரிப்பு இலத்​தில் உயிர் தப்​பிய முதிய​வர்​கள் அனை​வரும் ஹெலி​காப்​டர் மூலம் காத்​மாண்டு அழைத்து செல்​லப்​பட்​டு, அங்​குள்ள ஒரு முகாமில் தங்க வைக்கப்பட்​டுள்​ளனர்.

நேபாள பெருவெள்ளத்திலிருந்து உயிர் தப்பிய குணா மாயா போஹரா செய்தியாளர்களிடம் பேசுகை​யில்​, “வெள்​ளம் வந்​த​போது நான் தரைத்​தளத்​தில் உள்ள எனது அறையில் இருந்​தேன். ஏற்​கெனவே எனக்கு கால்​களில் ஊனம் இருக்​கும் நிலை​யில், வெள்​ளப் பெருக்​கி​னால் கைகளில் காயம் ஏற்​பட்​டது. ஆனாலும் உயிர் வாழ வேண்​டும் என்ற மன உறு​தி​யுடன் மரணத்தை எதிர்த்து போராடினேன்.

அறை​யின் ஜன்​னலைத் திறந்​து, எனது தலையை நீர் மட்​டத்​திற்கு மேலே வெளியே வைத்​தேன். 2-3 மணி நேரத்​திற்கு தலையை தண்​ணீருக்கு மேலே நீட்​டிய​வாறே இருந்​தேன். உள்​ளூர் தன்​னார்​வலர்​கள் வந்து என்னை மீட்​டனர்” என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here