Home கன்னியாகுமரி செய்திகள் குமரி கோவில்களின் வளர்ச்சிக்கு விரைவில் நடவடிக்கை: அமைச்சர் ரமேஷ் உறுதி

குமரி கோவில்களின் வளர்ச்சிக்கு விரைவில் நடவடிக்கை: அமைச்சர் ரமேஷ் உறுதி

0

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. செல்லசுவாமி சந்தித்து, குமரி மாவட்ட திருக்கோவில் ஊழியர்கள் சங்கத்தின் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தார். அதில், அமைச்சர் குமரி மாவட்டத்திற்கு நேரில் வந்து திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், திர்ப்பரப்பு மகாதேவர் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களை ஆய்வு செய்து, தேவையான வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். மனுவைப் பெற்ற அமைச்சர், கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version