Home மாநில செய்திகள் செல்போனில் பேசியபடியே ரோந்து வாகனத்தை ஓட்டிய தலைமை காவலர்: புகார் கொடுத்தவருக்கு அபராதம்

செல்போனில் பேசியபடியே ரோந்து வாகனத்தை ஓட்டிய தலைமை காவலர்: புகார் கொடுத்தவருக்கு அபராதம்

0

செல்​போனில் பேசி​யபடியே ரோந்து வாகனத்தை ஓட்​டிய தலை​மைக் காவலர் மீது புகார் தெரி​வித்த சமூக ஆர்​வலருக்​கு, அபராதம் விதிக்​கப்​பட்​ட​தாக குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது.

திரு​வண்​ணா​மலை மாவட்​டத்​தைச் சேர்ந்த சமூகஆர்​வலர் நவீன்​கு​மார் (28). சென்​னை, திரு​வொற்​றியூரில் தங்கி ஆட்டோ ஓட்டி வரு​கிறார். நேற்று முன்​தினம் அவசர வேலை காரண​மாக, ஷேர் ஆட்​டோ​வில் பயணி​யாக நுங்​கம்​பாக்​கம் நோக்கி சென்று கொண்​டிருந்​தார்.

சென்ட்​ரல் ரயில் நிலை​யம் அருகே காவல் ரோந்து வாக​னத்தை தலை​மைக் காவலர் ஒரு​வர் செல்​போனில் பேசி​யபடியே இயக்கி உள்​ளார். இதை கவனித்த நவீன்​கு​மார் தனது செல்​போனில் வீடியோ​வாக பதிவு செய்​தார்.

இதைத் தொடர்ந்​து, சம்​பந்​தப்​பட்ட போக்​கு​வரத்து காவல் பிரிவு போலீ​ஸாரை தொடர்பு கொண்​டு, செல்​போனில் பேசி​யபடி வாக​னம் ஓட்​டி​னால் எவ்​வளவு அபராதம் விதிக்​கப்​படும் என்று கேட்​டுள்​ளார்.

அதற்​கு, முதல் முறை விதி​மீறலுக்கு ரூ.1,000, 2-வது முறை அதே தவறை செய்​தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்​கப்​படும் என்று போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர். அப்​போது, “போலீ​ஸாரே இந்த தவறை செய்​தால் அவர்​களுக்​கும் அபராதம் விதிக்​கப்​படு​மா?” என்று நவீன்​கு​மார் கேட்​டதற்​கு, போக்​கு​வரத்து விதி​களை மீறு​பவர்​கள் யாராக இருந்​தா​லும் பாரபட்​சமின்றி நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று அதி​காரி​கள் பதிலளித்​த​தாக கூறப்​படு​கிறது.

இதையடுத்​து, காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் செயல்​பட்டு வரும் சென்னை போக்​கு​வரத்து போலீ​ஸாரின் வாட்​ஸ்​அப் எண்​ணுக்கு சம்​பவம் தொடர்​பான வீடியோவை நவீன்​கு​மார் அனுப்​பி​யுள்​ளார். நடவடிக்கை எடுக்காததால்​ வேப்​பேரி​யில் உள்ள சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​துக்கு சென்று விளக்​கம் கேட்​டுள்​ளார்.

நீண்ட நேர காத்​திருப்​புக்கு பின்​னர், போக்​குவரத்து விதியை மீறிய​தாக ஜானகி​ராமன் என்ற போலீஸ்​காரருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​துள்ளனர்.

இந்​நிலை​யில், காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் இருந்து வெளி​யேறிய சிறிது நேரத்​தில், ஹெல்​மெட் அணி​யாமல் சென்ற பழைய வழக்கு தொடர்​பாக நவீன்​கு​மார் செல்​போனுக்கு அடுத்​தடுத்து ரூ.1,000 வீதம் மொத்​தம் ரூ.2,000 அபராதம் விதிக்​கப்​பட்​ட​தாக போக்​கு​வரத்து போலீ​ஸாரிட​மிருந்து குறுந்​தகவல் வந்​துள்​ளது.

பழி​வாங்​கும் வகை​யில் இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​ட​தாக சந்​தேகமடைந்த நவீன்​கு​மார், மீண்​டும் காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில்

முறை​யிட்​டார். அதில் ஒரு அபராதத்தை ரத்து செய்​வ​தாக​வும், மற்​றொரு அபராதத்தை கட்ட வேண்​டும் என்​றும் அதி​காரி​கள் தெரி​வித்​த​தாக அவர் கூறி​னார்.

இந்த சம்​பவம் தொடர்​பாக, காவல் ஆணை​யர் உயர் போலீஸ் அதி​காரி​கள் மூலம் வி​சா​ரணை நடத்த உத்​தர​விட்​டுள்​ளார்​. இதையடுத்​து, சம்​பவம்​ குறித்​து வி​சா​ரணை நடை​பெற்​று வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version