தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் போலீஸார் 2-வது நாளாக விசாரணை நடத்தினர்.
ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றனர்.
திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் காலை, மாலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். போலீஸாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
அதன்படி செந்தில்பாலாஜி, அசோக்குமார் இருவரும் நேற்று முன்தினம் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். அப்போது அவர்களிடம் காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், செந்தில்பாலாஜியும் அசோக்குமாரும் நேற்று 2-வது நாளாக காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். அப்போது, அவர்களிடம் போலீஸார் சுமார் 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
