
முட்டம் நடுக்கடலில் 7-க்கும் மேற்பட்ட கேரளப் பதிவெண் கொண்ட விசைப்படகுகளில் வாணியக்குடி மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
குளச்சல், முட்டம் மீனவர்கள் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்று, வாணியக்குடி மீனவர்களைச் சுற்றிவளைத்ததாகக் கூறப்படுகிறது.
மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்ததுடன், வாணியக்குடி மீனவர்களின் வலைகள் மற்றும் பொருட்களைச் சேதப்படுத்திச் சென்றதாகப் புகார் எழுந்தது.
இதைக் கண்டித்து குளச்சல் துறைமுகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்ததால், முன்னெச்சரிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, மீனவர்களும் மீனவர் சங்க நிர்வாகிகளும் கலைந்து சென்றனர்.