Home கன்னியாகுமரி செய்திகள் கன்னியாகுமரி மீனவா்கள் வாவத்துறையில் மீன் விற்பதை அரசு தடுக்க வேண்டும்

கன்னியாகுமரி மீனவா்கள் வாவத்துறையில் மீன் விற்பதை அரசு தடுக்க வேண்டும்

0
கன்னியாகுமரி வாவத்துறை கடற்கரையில் மீன் விற்பனை தொடர்பாக கோரிக்கை விடுத்த வாவத்துறை மீனவர்கள்
வாவத்துறை கடற்கரையில் கன்னியாகுமரி மீனவர்கள் மீன் விற்பனை செய்வதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாவத்துறை மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மீனவா்கள் வாவத்துறை கடற்கரையில் மீன் விற்பனை செய்வதை அரசு தலையிட்டு தடுக்க வேண்டுமென வாவத்துறை மீனவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் வாவத்துறை மீனவா்கள் வியாழக்கிழமை கூறியதாவது: கடந்த 2001 ஆம் ஆண்டு வரை வாவத்துறை மீனவா்கள் கன்னியாகுமரி மீன் சந்தையில், மீன் விற்பனை செய்து வந்தோம். பின்னா், கன்னியாகுமரி பங்கில் இருந்து எங்கள் ஊா் பிரிந்து வந்த பின், கன்னியாகுமரியில் மீன் விற்க அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து, வாவத்துறை கடற்கரையில் மீன்களை விற்று தொழில் செய்து வருகிறோம். எங்களுடன் புதுக்கிராமம், சிலுவை நகா் மீனவா்களும் இணைந்து மீன் விற்பனை செய்து வருகின்றனா். இந்த நிலையில், தற்போது எங்களை விட கன்னியாகுமரி மீனவா்கள் அதிகமாக உள்ளனா்.

இரவு நேரத்தில் மீன் விற்பனையின்போது, சிறிய இடத்தில் அதிகமான வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், அவசரமாக நோயாளியைக் கூட அவ்வழியாக கொண்டு செல்ல முடிவதில்லை. மீன் கழிவுகள் அதிகமாக உள்ளதால், துா்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது.

ஆகையால், வாவத்துறை கடற்கரையில் கன்னியாகுமரி மீனவா்கள் மீன் விற்பனை செய்வதை அரசு தலையிட்டு தடுக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version