மார்த்தாண்டம்: கடையருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம்

0
23

மார்த்தாண்டம் அருகே மதிலகம் பகுதியில் உள்ள ஒரு பர்னிச்சர் கடை அருகே நேற்று 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டார். அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் புஷ்பராணியிடம் தகவல் தெரிவித்தனர். அவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here