Home கன்னியாகுமரி செய்திகள் மார்த்தாண்டம்: படிக்கட்டில் தவறிவிழுந்து மாற்றுத்திறனாளி பலி

மார்த்தாண்டம்: படிக்கட்டில் தவறிவிழுந்து மாற்றுத்திறனாளி பலி

0

சென்னையை சேர்ந்தவர் தீனதயாளன் (45). இவர் சற்று உடல் வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி ஆவார். திருமணம் ஆகவில்லை. இவரது பக்கத்து வீட்டில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த சிவகாளிதாசன் என்பவர் வசித்து வந்தார். இதனால் சிவகாளிதாசனும், தீனதயாளனும் நட்பாக பழகி உள்ளனர். தற்போது சிவகாளிதாசன் சென்னையில் இருந்து காலி செய்துவிட்டு தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். 

மிகவும் நட்பாக பழகியதால் அவருடன் தீனதயாளனும் புறப்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்து நண்பர் வீட்டிலேயே தங்கி உள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை தீனதயாளன் திடீரென படிக்கட்டில் தவறி விழுந்து மயங்கி மயங்கினார். படுகாயம் அடைந்தவரை உடனடியாக மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இது குறித்து அவரது அண்ணன் பன்னீர்செல்வம் என்பவரிடம் தகவல் தெரிவித்து, அவர் குமரி மாவட்டம் புறப்பட்டு வந்து குழித்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version