கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை, பங்குனி பரணி நட்சத்திரம், கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமை என ஆண்டுக்கு மூன்று முறை நடைபெறும் வலிய படுக்கை என்னும் மகா பூஜை இன்று கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நள்ளிரவு 12 மணி முதல் 1 மணிக்குள் நடைபெறுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொள்வார்கள்.














