மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா சாலிகா, மலேசியாவின் கோ ஜின் வெய்-யை எதிர்த்து விளையாடினார்.
இதில் அஷ்மிதா சாலிகா 21-13, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.கால் இறுதி சுற்றில் அஷ்மிதா சாலிகா, போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் லின் ஹோஜ்மார்க் கியர்ஸ்ஃபெல்டுடன் மோதுகிறார்.















