மாட்ரிட் டென்னிஸ்: சபலென்கா சாம்பியன்

0
327

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

ஸ்பெயினிலுள்ள மாட்ரிட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒற்றையர் இறுதிப் போட்டியில் அரினா சபலென்காவும், அமெரிக்க வீராங்கனை கோகோ காப்பும் மோதினர். இதில் சபலென்கா 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் சபலென்கா 3-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here