லார்ட்ஸ் டெஸ்ட்: மந்தனா, ஹர்மன்பிரீத் அரை சதம் விளாசல்

0
24

இங்கிலாந்து – இந்தியா மகளிர் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. கிரிக்கெட்டின் தாயகம் என அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் சர்வதேச மகளிர் டெஸ்ட் போட்டி நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.

முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. ஷபாலி வர்மா 0, யாஷ்டிகா பாட்டியா 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 35 ரன்களில் வாங் பந்தில் போல்டானார். 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து இன்னிங்ஸை கட்டமைத்தார்.

சிறப்பாக பேட் செய்து வந்த ஸ்மிருதி மந்தனா 108 பந்துகளில், ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் விளாசிய நிலையில் இஷி வாங் பந்தில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன்கள் சேர்த்தது. நிதானமாக விளையாடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 121 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் சேர்த்த நிலையில் மேடி வில்லியர்ஸ் பந்தில் போல்டானார்.59 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்திருந்தது. தீப்தி சர்மா 30, ஸ்னே ராணா 3 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here