டிஎன்பிஎல் 10-வது சீசன்: ஆக.4-ல் திருப்பூர் – திண்டுக்கல் மோதல்

0
15

டிஎன்​சிஏ சார்​பில் நடத்​தப்​படும் டிஎன்​பிஎல் தொடரின் 10-வது சீசன் வரும் ஆகஸ்ட் 4 முதல் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இம்​முறை போட்டி 2 கட்​டங்​களாக கடத்தப்படுகிறது.

முதல் கட்ட போட்டி ஆகஸ்ட் 4 முதல் 15 வரை திண்டுக்கல்லிலும், 2-வது கட்ட போட்டி சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் 18-ம் தேதி ​முதல் 28-ம் தேதி வரை​யும் நடை​பெறும் என ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்டு இருந்​தது.

இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான போட்டி அட்​ட​வணை நேற்று வெளி​யிடப்​பட்​டது. லீக் சுற்று போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் 22-ம் தேதி வரை நடை​பெறுகின்​றன. 2-வது கட்ட போட்​டியையொட்டி ஆகஸ்ட் 16 மற்​றும் 17 ஆகிய இரு நாட்​களுக்கு ஓய்வு கொடுக்​கப்​பட்​டுள்​ளது. பிளே ஆஃப் சுற்​றின் முதல் தகுதி சுற்று ஆட்​டம் 23-ம் தேதி​யும், எலிமினேட்​டர் ஆட்​டம் 24-ம் தேதி​யும், 2-வது தகுதி சுற்று ஆட்​டம் 26-ம் தேதி​யும் நடை​பெறுகின்​றன.

சாம்​பியன் பட்​டம் வெல்​வது யார் என்​பதை தீர்​மானிக்​கும் இறுதிப் போட்டி 28-ம் தேதி சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறுகிறது. இம்​முறை 22 டபுள் ஹெட்​டர்ஸ் (ஒரே நாளில் 2 ஆட்​டங்​கள்) நடை​பெறுகின்​றன. மொத்​தம் 32 ஆட்டங்​கள் நடை​பெற உள்​ளன.

ஆகஸ்ட் 4-ல் நடை​பெறும் தொடக்க ஆட்​டத்​தில் திருப்​பூர் தமிழன்ஸ் – திண்​டுக்​கல் டிராகன்ஸ் அணி​கள் மோதுகின்​றன. இந்த ஆட்​டம் இரவு 7.30 மணிக்கு நடை​பெறுகிறது. 2-வது கட்ட போட்​டி​யில் சென்​னை​யில் 18-ம் தேதி நடை​பெறும் ஆட்​டத்​தில் சேப்​பாக் சூப்​பர் கில்​லிஸ் – கோவை கிங்ஸ் அணி​கள் மோதுகின்றன. இந்த தொடரை சோனி நெட்​வோர்க் நேரலை செய்​கிறது. மேலும் டிஎன்​சிஏ-​வின் யூடியூப் சானலிலும் போட்டிகளை கண்டுகளிக்​கலாம்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here