கூடுதல் விலைக்கு மது விற்பனை: 20 நாட்களில் 200 பேர் சஸ்பெண்ட் – டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்

0
31

கூடு​தல் விலைக்கு மது விற்​பனை செய்​த​தாக கடந்த 20 நாட்​களில் 200 பேர் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டுள்​ள​தாக டாஸ்மாக் அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

தமிழகத்​தில் டாஸ்​மாக் மது​பானக் கடைகளில் மது பாட்​டில்​களுக்கு கூடு​தலாக பணம் வசூலிக்​கப்​படு​வ​தாக பல ஆண்​டு​களாக குற்​றச்​சாட்​டு​கள் இருந்து வரு​கிறது.

முதல்​வ​ராக விஜய் பதவி​யேற்ற நாள் முதலே பலர் டாஸ்​மாக் கடைகளில் கூடு​தல்​ தொகை வசூலித்​தால் அதை வீடியோ பதிவு செய்து சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்​டனர்.

மேலும், டாஸ்​மாக் நிர்​வாக​மும் கூடு​தல் விலைக்கு மது விற்​றால் நடவடிக்கை எடுக்​கப்​படும் என எச்​சரிக்கை விடுத்​தது. இந்​நிலை​யில், ஆட்சி அமைத்து ஒரு மாதம் நிறைவு பெற்​றுள்ள நிலை​யில், கடந்த 20 நாட்​களாக டாஸ்​மாக் நிர்​வாகம் சார்​பில் சமூக வலை​தளங்​களில் வெளி​யான வீடியோக்​கள், பெறப்​பட்ட புகார்​கள் அடிப்​படை​யில் சோதனை நடத்தி 200 பணி​யாளர்​களை பணி​யிடை நீக்​கம் (சஸ்​பெண்ட்) செய்​துள்​ள​தாக டாஸ்​மாக் அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here