டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இடது கை பந்துவீச்சாளர்: ஸ்டார்க் சாதனை

0
37

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இடது கை பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் செய்துள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான நேற்றைய போட்டியின்போது அவர் ஷதமன் இஸ்லாம் விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் அவர் தனது 434-வது விக்கெட்டைக் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்தியிருந்த இடது கை பந்துவீச்சாளர் ரங்கனா ஹெராத்தின் (இலங்கை) சாதனையை அவர் முறியடித்தார்.

ரங்கனா ஹெராத் 433 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இடது கை பந்துவீச்சாளர் என்ற பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார் ஸ்டார்க்.

கபில்தேவின் சாதனை சமன்

மேலும், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவின் சாதனையையும் மிட்செல் ஸ்டார்க் சமன் செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் 434 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

நேற்றைய போட்டியில் ஸ்டார்க் 434 விக்கெட்களை எட்டியுள்ளதன் மூலம் கபிலின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இன்றைய 2-ம் நாள் ஆட்டத்தின்போது கபில்தேவின் சாதனையை ஸ்டார்க் முறியடிக்க வாய்ப்புள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here