குழித்துறை: பா.ஜ அரசின் சாதனை விளக்க பயிலரங்கம்

0
175

மத்தியில் பாஜக அரசு பதவி ஏற்று 11 ஆண்டுகள் ஆகின்றன. இதன் ஒரு பகுதியாக விளவங்கோடு தொகுதி, மேல்புறம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க சார்பில் சழுவன்திட்டையில் பயிலரங்கம் நேற்று மாலை நடந்தது. இதில் மேல்புறம் தெற்கு ஒன்றிய தலைவர் சரவணவாஸ் நாராயணன் தலைமை வகித்தார். ஒன்றிய பொதுச் செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். 2047-ம் ஆண்டு இந்திய நாடு வல்லரசு ஆக வேண்டும் என்பதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த பயிலரங்க நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் ஐயப்பன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here