குழித்துறை பெருந்தெருவைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவர் சூரிய பிரசாத், மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் கண்டெடுத்த ரூ.60,000 பணத்தை தனது தாய் அம்பளியுடன் மார்த்தாண்டம் சப்-இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார். மாணவனின் நேர்மையைப் பாராட்டி சப்-இன்ஸ்பெக்டர் அவருக்குப் பரிசளித்து வாழ்த்தினார்.















