குமரி மேற்கு மாவட்டங்களான களியக்காவளை, குலசேகரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில், ஊர் காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் 90 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் தக்கலை துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த புதிய கண்காணிப்பு அமைப்பு, குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதோடு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
