கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் கடற்கரைப் பகுதியில் ஆமைகள் முட்டையிடும் சூழலைக் கருத்தில் கொண்டு, நேற்று கடற்கரையில் தேங்கியிருந்த சுமார் 300 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறையினரும் ஐயப்பா மகளிர் கல்லூரி மாணவிகளும் இணைந்து சேகரித்து அப்புறப்படுத்தினர். இந்த துப்புரவுப் பணி ஆமைகளின் இனப்பெருக்கத்திற்கு உதவும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.














