அருமனை பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் (55) பெண்களிடம் ஆபாச சைகை காட்டி, அரை நிர்வாணமாக நின்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போக்சோ வழக்கில் சிறைக்குச் சென்று தற்போது வெளியே வந்த நிலையில், நேற்று 24 வயது பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து ஆடையை அவிழ்த்து காண்பித்து, உறவுக்கு வருமாறு ரகளை செய்து வீட்டை சூறையாடியுள்ளார். இது குறித்து அருமனை போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, சைக்கோ ரவீந்திரனை போலீசார் கைது செய்தனர்.














