முளகுமூடு பேரூராட்சிக்கு சுமார் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் அஸ்திவாரக் குழிக்குள் ஊற்று நீர் நிரம்பி, ஆபத்தான சதுப்பு நிலப் பகுதியாக மாறியுள்ளது. இது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. உடனடியாக மாவட்ட ஆட்சியர், அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் விதத்தில் தற்போது கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டுமானத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.














