குமரி: ஆசிரியை இறந்த வழக்கை மறுவிசாரணை செய்ய கோரிக்கை

0
416

வெள்ளிச்சந்தை அருகே உள்ள சரல் பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி மகள் அஜிதா. இவர் தனியார் பள்ளி ஆசிரியை. இவரை சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் கடந்த 25. 10. 2023 திருமணம் செய்தார். திருமணமான சில மாதங்களில் குடும்பத் தகராறு ஏற்பட்டதாக  கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த அஜிதா  கடந்த 25 10 2024 அன்று (முதல் வருட திருமண நாளில்) வீட்டின் படுக்கை அறையில் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார்.

       ராஜகமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கு இடையே அஜிதாவின் பெற்றோர் மற்றும் சகோதரர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம்  ஒரு மனு அளித்தனர்.

       அந்த மனுவில்: –  அஜிதா இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும். திடீரென தற்கொலை செய்து கொண்டது நம்பும்படியாக இல்லை என தெரிவித்துள்ளனர். எனவே மகளின்  இறப்புக்கு காரணமானவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார். ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு வருடத்திற்குள் அஜிதா தற்கொலை செய்திருப்பதால் ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here