குமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் கெ. எம் பாரதி தலைமையில், நேற்று இரவு 9.30 மணிக்கு தேங்காப்பட்டணம் அருகே கேரளா பதிவெண் கொண்ட 2 சொகுசு கார்கள் சோதனை செய்யப்பட்டன. அவற்றில், மீனவர்களுக்கு மானிய விலையில் அரசு வழங்கும் 1800 லிட்டர் மண்ணெண்ணெய் கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது. டிரைவர்கள் தப்பி ஓடிய நிலையில், மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டு கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
