Home கன்னியாகுமரி செய்திகள் புதுக்கடை: நர்சிங் மாணவி திடீர் மாயம் – புகார்

புதுக்கடை: நர்சிங் மாணவி திடீர் மாயம் – புகார்

0

முஞ்சிறை பகுதியைச் சேர்ந்த சந்தியா மோகன் என்பவரின் மகள் சௌமியா (19), பிஎஸ்சி நர்சிங் முதலாமாண்டு மாணவி, நேற்று முன்தினம் வீட்டில் இருந்து திடீரென காணாமல் போனார். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, தனது மகளை கண்டுபிடித்து தருமாறு சந்தியா மோகன் புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version