குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், இன்று 11-ம் தேதி, பேருந்து நிலையங்களில் சிங்கப் பெண் சிறப்புப் படையினர் பொதுமக்கள், பெண் பயணிகள், மற்றும் மாணவிகளிடம் நேரடியாகப் பேசி, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நடக்கும் குற்றங்களைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குமரி மாவட்ட காவல் துறையின் இந்த சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
