குளச்சலில் உள்ள அரசு பஸ் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் சில்மிஷம் செய்த அரசு பஸ் டிரைவர் ஜவகர் (55) கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசார் ஜவகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜவகர் ஏற்கனவே இது போன்ற வழக்கில் கைதாகி சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.














