குளச்சல்: பைக் மோதி நடந்து சென்ற முதியவர் பலி

0
427

குளச்சல் பகுதியை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் (75). தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் தனியாக வசித்து வந்தார். இவர் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள கோயிலுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் (மார்ச் 2) மாலை கோயிலுக்கு செல்வதற்காக குளச்சலில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தார். 

உடையார் விளை பகுதியில் சென்ற போது எதிரே சிவகுமார் என்பவர் ஓட்டிய வந்த பைக் திடீரென தனிஸ்லாஸ் மீது மோதி தள்ளியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு சிவகுமார் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனிஸ்லாஸ் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று (மார்ச் 3) அவர் உயிரிழந்தார். இது குறித்த அவர் உறவினர் ஜான் ஸ்டீபன் என்பவர் குளச்சல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சிவகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here