குழித்தறையில் நவீன வடிவமைப்பில் லிப்ட் மற்றும் ஏசி வசதியுடன் விஎல்சி திருமண மண்டபம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ. 6 கோடி 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதனையொட்டி நகராட்சி தலைவர் பொன் ஆசை தம்பி அமைச்சர் நேருவை சென்னையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். மேலும் மார்த்தாண்டம் மார்க்கெட்டுக்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும், நூறாவது வாவு பலி பொருட்காட்சி துவக்க விழாவில் அமைச்சர் கலந்து கொண்டு துவக்கி வைக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின்போது முன்னாள் ஒன்றிய செயலாளர் சிற்றார் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.