கொற்றிக்கோடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சாமுவேல் தலைமையிலான போலீசார் நேற்று பன்னிப்பாகம் பகுதியில் குவாரியில் சோதனையிட்டனர். அப்போது அங்கு பாறை கற்களை ஏற்றிக் கொண்டிருந்த டெம்போவை சோதனை இட்டதில் அதில் கற்கள் அனுமதி இல்லாமல் ஏற்றி செல்வது தெரிய வந்தது.
தொடர்ந்து டெம்போ மற்றும் கற்களை ஏற்றிய பொக்லைன் இயந்திரம் ஆகிவற்றை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக கல்குவாரி உரிமையாளர் கேரள மாநிலம் நெய்யாற்றின் கரை பகுதியை சேர்ந்த ஷாஜி (51), டெம்போ டிரைவர் பெனில் (33), பொக்லைன் டிரைவர் ஸ்ரீ ஜின், வெள்ளி கோட்டை சேர்ந்த உரிமையாளர் ராஜகுமாரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் குவாரி உரிமையாளர் ஷாஜியை போலீசார் கைது செய்தனர்.