கொல்லங்கோடு போலீஸ் எஸ்ஐ பிரபகுமார் தலைமையிலான போலீசார் நேற்று மாலை சூசைபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் 14 பொட்டலங்களில் 45 கிராம் கஞ்சா இருந்தது. போலீசார், பானி (20) என்ற வாலிபரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.














