கொல்லங்கோடு பகுதி வழியாக பாறைப்பொடி கேரளாவுக்கு கடத்துவதாக புகார் உள்ளது. இந்த நிலையில் நேற்று (ஜனவரி 13) இரண்டு டாரஸ் லாரிகள் குமரி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு செங்கவிளை வழியாக கேரளாவுக்கு செல்லும் போது தக்கலை சரக துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் செங்கவிளையில் வைத்து தடுத்து நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்தார்.
அப்போது அதில் கொல்லங்கோடு பகுதிக்கு கொண்டு செல்வதாக பாஸ் இருந்தது. அதே நேரத்தில் அந்த வாகனம் கேரளாவுக்கு செல்வதால் அந்த லாரிகளையும் பறிமுதல் செய்து அவற்றை ஓட்டி வந்த சீதப்பால் பகுதியை சேர்ந்த அருண் செல்வம் (39) மற்றும் ஜோனல் (30) ஆகியோரை பிடித்து கொல்லங்கோடு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.