Home கன்னியாகுமரி செய்திகள் கொல்லங்கோடு:  பைக் விபத்தில் முறிந்தது இன்ஜினியர் கால்

கொல்லங்கோடு:  பைக் விபத்தில் முறிந்தது இன்ஜினியர் கால்

0

கொல்லங்கோடு அருகே காட்டுகடை பகுதியை சேர்ந்தவர் பெலிக்ஸ் கேமின்(39). இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை தனது பைக்கில் இவர் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தார். கோனசேரி என்ற இடத்தில் செல்லும்போது பெண் ஒருவர் ஓட்டி வந்த ஸ்கூட்டர் பெலிக்ஸ் பைக்கில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பெலிக்ஸ் கேமின் கால் முறிந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூர  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version