கோடிமுனை பகுதியில் கடற்கரை மணல் பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் வள்ளங்களில் இருந்து இன்ஜின் மூடிகள் திருடப்பட்டுள்ளன. புதூரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் தனது வள்ளத்தில் இன்ஜின் மூடி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் விசாரித்தபோது, மேலும் 13 மீனவர்களின் வள்ளங்களில் இருந்த இன்ஜின் மூடிகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு சுமார் 3 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. இது குறித்து ரவிக்குமார் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.















