கிள்ளியூர்: கால்வாயில் கொட்டிய கழிவுகள் திருப்பி அனுப்பி வைப்பு

0
637

கிள்ளியூர், மங்காடு ஊராட்சி பகுதி வழியாக நெய்யாறு இடது கரை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் இரவு வேளைகளில் மர்ம நபர்கள் கழிவு பொருட்களை கொட்டி விட்டு செல்வது வழக்கம். இதை கண்டறியும் வகையில் அந்த பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் நெய்யாறு இடது கரை கால்வாயில் நெச்சி மூடு, பொட்டவிளை பகுதிகளில் ஏராளமான கழிவுகள் கொண்டு கொட்டப்பட்டு இருந்தது. 

இதையடுத்து ஊராட்சி பணியாளர்கள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா சோதனை செய்த போது, மேல்புறம் பகுதியில் உள்ள ஒரு ஆக்கர் கடை வாகனங்கள் கழிவுகளை கொட்டி சென்றது தெரியவந்தது. இதை அடுத்து நேற்று மேல்புறம் பகுதியில் உள்ள ஆக்கர் கடை வாகனத்தை வரவழைத்து, மங்காடு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூபாய் 5000 அபராதம் விதித்து கொட்டப்பட்ட கழிவுகளை திருப்பி ஏற்றி அனுப்பி வைத்தனர்.கிள்ளியூர், மங்காடு ஊராட்சி பகுதி வழியாக நெய்யாறு இடது கரை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் இரவு வேளைகளில் மர்ம நபர்கள் கழிவு பொருட்களை கொட்டி விட்டு செல்வது வழக்கம். இதை கண்டறியும் வகையில் அந்த பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் நெய்யாறு இடது கரை கால்வாயில் நெச்சி மூடு, பொட்டவிளை பகுதிகளில் ஏராளமான கழிவுகள் கொண்டு கொட்டப்பட்டு இருந்தது. 

இதையடுத்து ஊராட்சி பணியாளர்கள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா சோதனை செய்த போது, மேல்புறம் பகுதியில் உள்ள ஒரு ஆக்கர் கடை வாகனங்கள் கழிவுகளை கொட்டி சென்றது தெரியவந்தது. இதை அடுத்து நேற்று மேல்புறம் பகுதியில் உள்ள ஆக்கர் கடை வாகனத்தை வரவழைத்து, மங்காடு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூபாய் 5000 அபராதம் விதித்து கொட்டப்பட்ட கழிவுகளை திருப்பி ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here