கருங்கல்: ஹோட்டலில் 2 பேருக்கு கத்திக்குத்து

0
271

குமரி மாவட்டம் நயினாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் உதயசங்கர் (18). இவரது நண்பர் ஸ்ரீதர் (19) உட்பட சிலர் கருங்கல் பகுதி வெள்ளியாவிளையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு நேற்று மாலை சென்றனர். அப்போது சிவப்பு டீ ஷர்ட் அணிந்த சப்ளையர் பரிமாறிக் கொண்டிருந்தார். அப்போது அதே கலரில் டீ சர்ட் உடை அணிந்து வந்த சர்ஜின் என்பவரிடம் தவறுதலாக உணவு கேட்கவே, அவர் அங்கிருந்த கத்தியால் உதயசங்கரை குத்திவிட்டார். தடுக்க முயன்ற ஸ்ரீதருக்கும் குத்து விழுந்தது. இருவரும் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கருங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here