களியக்காவிளை அருகே மகேஸ்வரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவபார்வதி கோயிலில் சிவராத்திரி திருவிழா நேற்று மாலை திருக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி, கோவில் மேல்சாந்தி குமார் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். பிப்ரவரி 8 அன்று லட்சத்தீபம், 14 அன்று ஆராட்டு, மற்றும் 15 அன்று சிவராத்திரி விழா நடைபெறும்.














