களியக்காவிளை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் நேற்று மாலையில் நடைபெற்ற வாகன சோதனையில், போலி முகவரி கொண்ட காரில் இருந்து 225 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. பானக்குடி விளைவீடு பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (45) மற்றும் விரிவிளை பகுதியைச் சேர்ந்த விஜய் பிரதீப் (34) ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்த புகையிலை பொருட்கள் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.














