களியக்காவிளை முஸ்லீம் நலச்சங்கம் சார்பில் பொது அறிவு போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா பதறுல் இஸ்லாம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவில் களியக்காவிளை முஸ்லீம் நலச்சங்க தலைவர் மாகின் அபுபக்கர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் நாசர், பொருளாளர் அப்துல் நாசர், செயற்குழு உறுப்பினர்கள் ரிபாய், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இசை முரசு மற்றும் எப்.எம். ரேடியோ இயக்குனர் முகம்மது அஸ்கர், பதறுல் இஸ்லாம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் முகம்மது சியாத், முதல்வர் அப்துல் மஜித், மேக்கோடு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராஜ், களியக்காவிளை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சித்தார்த்தன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு குமரி மாவட்ட தலைவர் சம்சுதீன், பத்திரிகையாளர் சுரேஷ் குமார், உள்ளிட்டோர் பேசினர். நிகழ்ச்சியில் பொது அறிவு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முஸ்லீம் நலச்சங்க துணைச் செயலாளர் அப்துல் வாஹித் நன்றி கூறினார்.