சிங்கப்பூர் நாடாளுமன்ற தேர்தலில் கடையநல்லூர் மருத்துவர் வெற்றி

0
570

சி்ங்கப்பூர் நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி மாவட்டம், கடையநல்லூரை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர் வெற்றி பெற்றுள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான மக்கள் செயல் கட்சி வெற்றிபெற்று, மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த தேர்தலில் ஜீராங் – வெஸ்ட் தொகுதியில் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட்ட டாக்டர் ஹமீத் ரஹ்மத்துல்லா பின் அப்துல் ரசாக் வெற்றி பெற்றுள்ளார்.

இவர், தென்காசி மாவட்டம், கடையநல்லூரை பூர்வீகமாக கொண்டவர். எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணரான இவரது குடும்பம் 3 தலைமுறைகளாக அங்கு வசிக்கிறது. இவரது தந்தை ஓசைனா அப்துல் ரசாக் சிங்கப்பூரில் சுங்க இலாகா அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

ஹமீத் ரஹ்மத்துல்லா பின் அப்துல் ரசாக் வெற்றி பெற்றதையொட்டி, கடையநல்லூரில் இவரது உறவினர்கள், தென்காசி மாவட்ட அரசு தலைமை காஜி முகைதீன் அப்துல் காதர் தலைமையில் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here