Home விளையாட்டு செய்திகள் தோல்விக்குப் பிறகு ரசிகர்களுக்கு தலைவணங்கி நன்றி தெரிவித்த ஜப்பான் பயிற்சியாளர் | FIFA WC 2026

தோல்விக்குப் பிறகு ரசிகர்களுக்கு தலைவணங்கி நன்றி தெரிவித்த ஜப்பான் பயிற்சியாளர் | FIFA WC 2026

0

நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் ரவுண்ட் ஆஃ32 சுற்றில் தோல்விக்கு பிறகு தங்களது ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு தலைவணங்கி நன்றி தெரிவித்தான் ஜப்பான் அணியின் பயிற்சியாளர் ஹாஜிம் மோரியாசு. இது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.

இந்த தொடரின் குரூப் சுற்று ஆட்டங்கள் இனிதே நிறைவடைந்த நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் தொடங்கியுள்ளது. இதில் வீரர்கள், அணிகள், ரசிகர்கள் என ஹார்ட்-பிரேக்குகள் ஏராளம் இருக்கும். அந்த வகையில் ஐந்து முறை பட்டம் வென்ற பிரேசில் உடன் ஜப்பான் அணி ரவுண்ட் ஆஃ32 சுற்றில் மோதி விளையாடியது.

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஹூஸ்டனில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இதில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று பிரேசிலுக்கு அதிர்ச்சி கொடுத்தது ஜப்பான். இருப்பினும் ஆட்ட நேரத்தின் முடிவில் 2-1 என்ற கணக்கில் பிரேசில் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஜப்பான் இந்த தொடரில் இருந்து வெளியேறியது.

இந்நிலையில், ஆட்டத்தின் இறுதி விசில் ஒலித்தவுடன் தனது அணியினருடன் ஆடுகளத்தின் மையத்துக்கு வந்து தலைவணங்கி தங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு ஜப்பான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஹாஜிம் மோரியாசு நன்றி தெரிவித்தார்.

ஜப்பான் நாட்டு கலாச்சாரத்தில் தலைவணங்கி நன்றி சொல்லும் Ojigi வழக்கத்தை அவர் கடைபிடித்தார். அது பார்க்கவே மிகவும் உணர்வுபூர்வமானதாக இருந்தது. அவரது செயல் சமூக வலைதள பயனர்களின் நெஞ்சங்களை வென்றது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version